சமீபகாலமாக விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர, சில அநாகரிகச் செயல்களும் பயணிகளை பதைபதைப்புக்கு உள்ளாக்குகின்றன. மற்றொரு பக்கம் சில நேரம், பயணிகள் சிலர் முன்னெச்சரிக்கையின்றி அவசரகால வழிக்கான கதவுகளைத் திறக்கும் செயல்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கதவு பெயர்ந்து விழுந்ததில் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் 16,325 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் மையப் பகுதியில் இருந்த கதவு பெயர்ந்து, பறந்து சென்றது. இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். சிஎடுத்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.
பின்னர், உடனடியாக விமானம் போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. விமானம் பாதுகாப்பாக நேற்றிரவு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி முதல் வர்த்தக பயன்பாட்டுக்கு வந்த இந்த போயிங் ரக விமானம், இதுவரை 145 முறை விமான பயணத்தில் ஈடுபட்டு உள்ளது என பிளைட்ராடார் 24 என்ற விமான இயக்க கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.