fbpx

பயணியை மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளிய அரசுப் பேருந்து நடத்துனர்..! பாய்ந்தது நடவடிக்கை..!

கர்நாடக அரசுப் பேருந்து நடத்துனர், பயணி ஒருவரின் மார்பில் உதைத்து பேருந்தில் இருந்து வெளியே தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் தென்கன்னட மாவட்டம் ஈஸ்வரமங்களாவில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து நடத்துனர் பயணி ஒருவரின் மார்பில் எட்டி உதைத்து சாலையில் தள்ளிய மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈஸ்வரமங்களா நகரின் சந்திப்பில் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட நபர், பேருந்தின் நடத்துனர் சுப்புராஜ் ராய் என அடையாளம் காணப்பட்டார். குடிபோதையில் இருந்த அந்த பயணி, பேருந்தில் ஏறும்போது அந்த நடத்துனர் பயணியை தடுத்து நிறுத்தி அவரின் குடையை பிடிங்கி சாலையில் வீசியுள்ளார்.

பயணியை மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளிய அரசுப் பேருந்து நடத்துனர்..! பாய்ந்தது நடவடிக்கை..!

அப்போது பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறிய நடத்துனர், பயணியை கையால் தாக்கி வாக்குவாதத்தில் ஈட்டுபட்டார். இறுதியில், பயணியின் மார்பில் காலால் எட்டி உதைத்து சாலையில் தள்ளினார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவியதால், பேருந்து நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புத்தூர் கேஎஸ்ஆர்டிசி கோட்டக் கட்டுப்பாட்டாளர் ஜெயகர ஷெட்டி கூறுகையில், “பேருந்தில் இருந்தவரின் உடல்நிலை என்னவாக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க, எந்த நிர்வாகிக்கும் அதிகாரம் இல்லை. நிர்வாகி செய்தது தவறு. அவரை இன்று கர்நாடகா போக்குவரத்துக் கழகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், பயணிக்கு ஆகும் மருத்துவ செலவை கர்நாடக போக்குவரத்து கழகம் கேஎஸ்ஆர்டிசி செலுத்தும்” என தெரிவித்துள்ளது.

Chella

Next Post

விமான போக்குவரத்து துறைக்கு ரூ.17000 கோடி இழப்பு ஏற்படும்...ஏஜென்சி வெளியிட்ட பகீர் கணிப்பு

Thu Sep 8 , 2022
உள்நாட்டு விமான போக்குவரத்து துறைக்கு ரூ.17,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஏஜென்சி ஒன்று பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் கடன் மதிப்பு மற்றும் , முதலீடு பற்றிய தகவல் வழங்குவழ தொடர்பான Icra ஏஜென்சி உள்நாட்டு விமான போக்குவரத்தில் வருங்காலத்தில் எப்படி இருக்கும்  என கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து துறைக்கு சுமார் ரூ.17,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற கணிப்பை […]

You May Like