fbpx

சாலையில் நின்ற பெண்ணை திடீரென ஆட்டோவுக்குள் இழுத்துப் போட்ட டிரைவர்..!! 4 பேர் மாறி மாறி பலாத்காரம்..!!

குழந்தையுடன் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட மியான்மர் அகதிப் பெண், 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் விகாஸ்புரியில் மியான்மர் நாட்டை சேர்ந்த பெண் அகதியும் (21), அவரது கணவரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் முதலே அந்தப் பெண் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி தனது கணவருடன் காளிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அன்றைய தினம் மருத்துவரை சந்தித்த பிறகு, இரவு 9.30 மணியளவில் காளிந்தி கஞ்ச் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். பின்னர் அவரது கணவர் கழிவறையை பயன்படுத்துவதற்காக சாலையை கடந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில், சாலையோரம் ஆட்டோ ஒன்று நின்றிருந்தது. அந்த ஆட்டோவின் டிரைவர், திடீரென கையில் குழந்தையுடன் நின்றிருந்த பெண்ணின் வாயில் துணியால் கட்டி அவரையும் குழந்தையையும் ஆட்டோவிற்குள் இழுத்து போட்டார். பின்னர் அவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கிருந்த தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து மொத்தம் 4 பேர் அந்தப் பெண்ணை பாலியல் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண், சுயநினைவை இழந்து அங்கேயே கிடந்தார். அடுத்த நாள் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அந்தப் பெண்ணின் நிலைமையை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

”இப்படி அவமானப்படுத்திட்டீங்களே”..!! போலி டாக்டர் பட்டம்..!! செம கோபத்தில் நடிகர் வடிவேலு..!!

Wed Mar 1 , 2023
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், தனியார் நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலைகத்தின் அரங்கத்தை பயன்படுத்தியதாகக் கூறினார். நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும், பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு கடந்த நவம்பர் மாதமே அனுமதி கோரியதாகவும், முதலில் அனுமதி […]
”இப்படி அவமானப்படுத்திட்டீங்களே”..!! போலி டாக்டர் பட்டம்..!! செம கோபத்தில் நடிகர் வடிவேலு..!!

You May Like