இணையத்தை கலக்கும் பிரபல மாடலாக வலம் வந்த ராக்கி குப்தா என்ற பெண் பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா நகராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு போட்டியிட்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதால் அரசியல் களத்தில் பெரும் கவனத்தையும் பெற்றவர் இவர். 2022ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யும் போது கொடுத்த விவரங்களில் தனக்கு மூன்றாவது குழந்தை இருப்பதை இவர் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் இந்த தகவல் வெளியில் கசிந்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த ஆறு மாதங்களாக இவர் மீது முன்னாள் மேயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடந்து வந்தது.
ராக்கி குப்தா முன்னாள் மாடல் அழகி ஆவார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகளும் வாங்கியுள்ளார். இன்றும் சமூக வலைத்தளங்களில் 70000த்திற்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பின்தொடர்புவர்களை கொண்டுள்ளார். இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த செய்தி அவரது இணைய ஆதரவாளர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது