தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை.
இது அவர் தனது அறிக்கையில்; தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகள். கூட்டணி தர்மத்தோடு, வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்தவர்களுக்கு தேமுதிக சார்பில் பாராட்டுகள். ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக ஆற்றியிருக்கிறோம்.
தேர்தல் ஆணையமும், ஆட்சியாளர்களும், மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை, இனிவரும் காலங்களில் உறுதியாக ஏற்படுத்த வேண்டும். இம்முறை, மக்களுக்கு பெரிய அளவில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. சென்னை போன்ற மாநகரங்களில் இருப்பவர்கள் வாக்களிப்பதை பெருமளவில் விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது என தேசிய முற்போக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.