பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது: இவை தேர்தல் சின்னங்கள் உத்தரவு 1968-ன் பயன்களை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது: இவை தேர்தல் சின்னங்கள் உத்தரவு 1968-ன் பயன்களை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பீகார், தில்லி, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அல்லது நோட்டீசுக்கு பதில் அளிக்காதது, 2014, 2019 ஆண்டுகளில் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எதிலும் போட்டியிடாதது ஆகிய காரணங்களால் இவை செயல்படாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 253 கட்சிகளின் 66 கட்சிகள் தேர்தல் சின்னங்கள் ஆணை 1968ன்படி பொது சின்னங்களுக்காக விண்ணப்பித்திருந்த போதும் சம்பந்தப்பட்ட தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான சட்டத்தின் விதி 13 உட்பிரிவு (ii)(இ) வழிகாட்டுதல்படி, ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அது பதிவு செய்த கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.