வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் குறித்து தினசரி தகவல் தெரிவிக்குமாறு வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), டெல்லியில் உள்ள வருவாய்த் துறை ஆகியவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் குறித்து தினசரி தகவல் தெரிவிக்குமாறு வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இது அமலில் இருக்கும் என்பதால், கண்காணிப்புக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வங்கிகள் தயாராகி வருகின்றன. ஊழியர்களின் சிறப்புக் குழுக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ள வங்கிகள், சந்தேகப்படும்படியான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தினமும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளன.