இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது.
இதனையடுத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய, மாநில அரசு அலுவல கங்களில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் அல்லது அவர்கள் புகைப்படங்களுடன் கூடிய காலண்டர்களும் அகற்றப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து நிலையில் தேர்தல் அணையம் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் உள்துறை செயலாளரை நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறை செயலாளரும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் மேலும், மேற்கு வங்காளத்தின் தலைமை காவல்துறை அதிகாரியான காவல்துறை தலைமை இயக்குனரை (டிஜிபி) இடமாற்றம் செய்ய தேர்தல் குழு உத்தரவிட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாஹல் மற்றும் கூடுதல் கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்களை பதவி நீக்கம் செய்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த அல்லது சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பல முனிசிபல் கமிஷனர்களையும், கூடுதல் மற்றும் துணை முனிசிபல் கமிஷனர்களையும் நீக்குவது தொடர்பான தேர்தல் கமிஷனின் உத்தரவுகளுக்கு இணங்க மகாராஷ்டிரா தவறியது குறிப்பிடத்தக்கது.
மாநில தலைமைச் செயலருக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் அறிக்கை அளிக்குமாறு பிஎம்சி மற்றும் கூடுதல் மற்றும் துணை ஆணையர்களை இடமாற்றம் செய்ய ஆணையம் உத்தரவிட்டது.
மேலும், மகாராஷ்டிராவில் உள்ள மற்ற மாநகராட்சிகள் முழுவதும் இதேபோன்ற நிலையில் உள்ள அனைத்து நகராட்சி ஆணையர்களையும், கூடுதல் அல்லது துணை முனிசிபல் கமிஷனர்களையும் இடமாற்றம் செய்ய தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நடவடிக்கைகள், தேர்தல் நடைமுறையின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் ஆணையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும், இது முதன்மைத் தேர்தல் ஆணையர் குமாரால் பல முறை வலியுறுத்தப்பட்டது.