கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு தொடர்பாக ஆய்வு நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில் கிடைத்துள்ள புதிய தகவலின்படி சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.