fbpx

வெடித்து சிதறிய எரிமலை!. 6,500 அடி உயரத்துக்கு எழும் கரும்புகை!. மக்கள் வெளியேற்றம்!

Volcano: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறி வருவதால், அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் 9,480 அடி உயரம் கொண்ட மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எரிமலை வெடிப்புகளால் உயிரிசேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, 5 மாதங்களுக்கு முன்பு பருவமழை பாதிப்பால், மராபி மலை பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையோர கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில் 67 பேர் பலியாகினர். மேலும் இந்த மராபி எரிமலை கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் வெடித்து சிதறியதில் 24 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் யார் தெரியுமா..? மாநாடு முடிந்ததும் விஜய் சொன்ன அந்த வார்த்தை..!!

English Summary

The erupted volcano! 6,500 feet of cane arch. Evacuation of people!

Kokila

Next Post

உங்க குழந்தைகள் விரல் சூப்புகிறார்களா?. அலட்சியம் வேண்டாம்!. இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள்!

Mon Oct 28 , 2024
Do your children lick their fingers? Don't be indifferent! Will become addicted to this habit!

You May Like