fbpx

#JustNow: இளநிலை NEET தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகாது…! தேசிய தேர்வு முகமை திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் இன்று இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகாது என தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17ஆம் தேதி 497 நகரங்களில் 3570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 தேர்வர்கள் எழுதி இருந்தனர். முதல்முறையாக இந்தியாவிற்கு வெளியில் 14 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை காலை முதல் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலையில் முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் neet.nta.nic.in இணையதளத்தில் இன்று மாலை முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது‌.

Vignesh

Next Post

#Rain Alert: இன்று தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டத்தில் கனமழை...! வானிலை மையம் கணிப்பு...!

Wed Sep 7 , 2022
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக மாநில மையம் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like