fbpx

தயாரா இருங்க…! ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை…! தேர்வாணையம் அறிவிப்பு…!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கான கணினி வழித் தேர்வு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வாணையத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரையில் பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்போது ஜனவரி மாதம் 31 முதல் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள் இரண்டிற்கு உரியத் தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வுக்கான அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் , தேர்வு கால அட்டவணை ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வீட்டுக் கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு..!! பிரபல வங்கி முக்கிய அறிவிப்பு..!!

Wed Jan 4 , 2023
வீட்டுக் கடன் உள்ளிட்ட சில்லரை கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி, தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், தற்போது 6.25 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் இருக்கிறது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால், வங்கிகளிலும் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவைகளுக்கான வட்டி அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தற்போது வீட்டு […]

You May Like