கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..
சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ இலவசங்கள் வேறு நலத்திட்டங்கள் வேறு என்று சமீபத்தில் உச்சநீதிமன்றமே கூறியிருந்தது.. இதுபற்றி நாடு முழுவதும் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.. கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது.. கல்வி என்பது அறிவு நலம் சார்ந்தது.. மருத்துவம் என்பது உடல்நலம் சார்ந்தது.. இல்லம் தேடி, கல்லூரி கனவு, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.. இவை எல்லாம் இலவச திட்டங்கள் அல்ல.. சமூக நல திட்டங்கள்.. ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் பொருட்டு இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது..
இலவசங்கள் கூடாது என்று அறிவுரை சொல்வதற்கு சிலர் புதிதாக வந்துள்ளனர்.. அதை பற்றி நமக்கு கவலை இல்லை.. இதை பற்றி மேலும் பேசினால் அது அரசியலாகிவிடும்.. மாணவர்கள் அனைவரும் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும்.. பெண்கள் படித்துவிட்டு சரியான பணிகளை தேர்வு செய்ய வேண்டும்..