fbpx

உல்லாசத்தில் மிதந்த கள்ளக்காதல் ஜோடி..!! வீட்டை தாழ்ப்பாள் போட்டு ஊரையே கூட்டிய நபர்..!! கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சக்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது மனைவி அவந்திகா (வயது 20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், குழந்தை ஏதும் இல்லை. அதே பகுதியை சேர்ந்த 23 வயதாகும் ராம்குமார் என்பவர் அவந்திகாவின் உறவினர். இவரும், சக்தியும் கேரள மாநிலத்துக்கு தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

இதனால் சக்தி வீட்டுக்கு ராம்குமார் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, ராம்குமாருக்கும், அவந்திக்காவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது. இந்த விவகாரம் சக்திக்கு தெரியவரவே, அவர்களை கண்டித்துள்ளார். ஆனாலும், கள்ளக்காதலனை முடித்துக் கொள்ளவில்லை. நேற்று முன்தினம் இரவு அவந்திகா வீட்டுக்கு ராம்குமார் சென்றார். அவர்கள் 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டின் கதவு தாழ்ப்பாளை வெளிப்புறமாக பூட்டி விட்டு கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, உள்ளே இருந்த ராம்குமாரும் அந்த பெண்ணும் 2 பேரும் கதவை திறக்க சொல்லியும் அவர் திறக்கவில்லையாம். மேலும் அந்த நபர், இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் இந்த கள்ளக்காதல் ஜோடி குறித்து தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த ஏரியாவில் உள்ள பொதுமக்கள் பலர் வீட்டின் முன்பு குவிந்தனர்.

இதற்கிடையே, வீட்டுக்குள் சிக்கிய அவந்திகா, ராம்குமாரை மாடியில் உள்ள அறையில் பரணுக்குள் ஒளிந்து கொள்ளுமாறு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராம்குமார் மாடிக்கு ஓடிச்சென்று விட்டார். அதேநேரத்தில் ராம்குமார் உடனான கள்ளக்காதல் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டதே என்று அவந்திகா மனம் உடைந்தார். அவமானம் தாங்க முடியாத அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி, ராம்குமார் மாடிக்கு சென்றவுடன், ஒரு அறையில் அவர் சேலையால் தூக்குப்போட்டு அவந்திகா உயிரை மாய்த்துக் கொண்டார்.

சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பிறகு கதவை திறந்து பொதுமக்கள் வீட்டுக்குள் சென்றுள்ளார்கள். அப்போது வீட்டுக்குள் அவனிகா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், மாடியில் பதுங்கி இருந்த ராம்குமாரும் வெளியே வந்தார். இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சின்னமனூர் போலீசார், அவந்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவந்திகாவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரை மாய்த்துக் கொண்ட அவனிகாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. தாட்சாயிணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Read More : கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்.. வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஊர் மக்கள்..!! கடைசியில் நடந்த விபரீதம்..

English Summary

Trapped inside the house, Avantika tells Ramkumar to hide in the attic room.

Chella

Next Post

வாகன ஓட்டிகளே..!! இனி ஒரு நாளைக்கு ரூ.200-க்கு மட்டுமே பெட்ரோல் போட முடியும்..!! ஆட்டோவுக்கு ரூ.400, காருக்கு எவ்வளவு..?

Tue Nov 12 , 2024
Two-wheeler drivers can buy only Rs.200 worth of petrol per day.

You May Like