தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடராக இருந்த மகாபாரதம் புராண தொடரில் சகுனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, அதன் மூலம் மிகவும் பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் குஃபி பெயின்டல். அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 79. 1975 ஆம் ஆண்டு வெளியான ரஃபு சக்கர் என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் மகாபாரதம் தொடரின் மூலம் தான் அவர் பிரபலமடைந்தார்.
நடிகர் குஃபி பெயின்டலுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி, அவரது ரசிகர்கள் பலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.