தமிழ் சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ராஜ் கமல். இவர் இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் சஹானா என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகராக ராஜ்கமலை அறிமுகப்படுத்தினார். 2006ஆம் ஆண்டில் ராஜ்கமல், ஜோடி நம்பர் ஒன் என்ற ஸ்டார் விஜய் நடத்திய நிகழ்ச்சியில் அவரது மனைவி லதா ராவ் உடன் பங்கேற்றார். பின்னர், நடிகர் ரஜினி நடித்த லிங்கா, சண்டிக்குதிரை, நவீன சரஸ்வரதி சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பல்வேறு தொலைக்காட்சியில் இடம்பெறும் முக்கிய நாடகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இவரது மனைவி லதா ராவும் பிரபல நடிகை ஆவார். இவர் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், யங் மங் சங், நிமிர்ந்து நில் ஆகிய படத்திலும், அப்பா, திருமதி செல்வம் போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ராஜ்கமலும், லதா ராவும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு லாரா மற்றும் ராகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயலில் பகுதியில் ஒரு வீட்டை கட்டியுள்ளனர். இந்த வீட்டில் திரைப்படம், நாடகங்கள் ஆகிவற்றுக்கான சூட்டிங் நடத்த வாடகைக்கு விட்டுள்ளனர். இதற்கான வீட்டை பல்வேறு விதமான அலங்காரத்தோடு புதிய டிசைனில் கட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வீட்டில் விலை உயர்ந்த டிவி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயுள்ளதாக மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் பின் பக்க கதவை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராஜ்கமலின் புகாரின் பேரில் சம்பவம் நடைபெற்றுள்ள இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.