fbpx

RIP: பிரபல முன்னாள் மிஸ் இந்தியா காலமானார்!… ரசிகர்கள் சோகம்!

RIP: 2017ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ரிங்கி சக்மா மார்பக புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

ரிங்கி சக்மா 2017 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றிருந்தார். இவருக்கு தற்போது வயது 25. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்தார். 2022 ஆம் ஆண்டில், அவருக்கு வீரியம் மிக்க பைலோட்ஸ் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது, அதன் பிறகு அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் புற்றுநோய் நுரையீரலுக்கு பரவியது. அதன் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் கீமோதெரபியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 22 அன்று சக்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவர் உயிரிழந்த தகவல் மிஸ் இந்தியாவின் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 மிஸ் இந்தியா போட்டியின் போது ரிங்கி தனது சமூகத்திற்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் போட்டியிட்டதால் அவருக்கு மிஸ் கான்ஜினியலிட்டி மற்றும் பியூட்டி வித் எ பர்பஸ் ஆகிய 2 துணை தலைப்புகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore:  ’விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகள்’..!! 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!!

Kokila

Next Post

School: ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா ரூ.2000 வழங்கப்படும்...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...! முழு விவரம் உள்ளே

Sat Mar 2 , 2024
2024- 25 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் அதிகரித்திட வேண்டும். இது குறித்து பள்ளி கல்வி இயக்குநர் தனது அறிவிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் முரட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற […]

You May Like