fbpx

நீதிமன்ற உத்தரவால் ரயிலுக்கே உரிமையாளரான விவசாயி..! எப்படி தெரியுமா?

நீதிமன்ற உத்தரவு படி ரயில்வே இழப்பீடுத் தொகை வழங்காததால், சம்புரான் சிங் என்ற விவசாயி நாட்டிலேயே முதல் முறையாக ஒரு ரயிலின் உரிமையாளர் ஆனார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் சம்புரான் சிங். 2007ஆம் ஆண்டு லூதியானா – சண்டிகர் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது இந்திய ரயில்வே விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தியது. ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் வீதம் நிலத்துக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டது. சம்புரன் சிங்கின் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், தன் நிலத்திற்கு ரயில்வே குறைவான பணம் கொடுத்ததாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, இழப்பீடு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரித்தது. மேல்முறையீட்டில், அது மேலும் அதிகரித்து ரூ.1.47 கோடியாக உயர்ந்தது.

2012ஆம் ஆண்டு வடக்கு ரயில்வே 2015ஆம் ஆண்டுக்குள் பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு போட்டது. ஆனால், ரயில்வே ரூ.42 லட்சம் மட்டுமே வழங்கியது. மீதியுள்ள 1.05 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. இந்தத் தொகையைக் கொடுக்க முடியவில்லை என்று ரயில்வே கூறிவிட்டது. ரயில்வே சார்பில் பாக்கி பணத்தைச் செலுத்தாததால் 2017ஆம் ஆண்டு லூதியானா நிலையத்திற்கு வரும் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. சம்புரன் சிங் தன் வழக்கறிஞர்களுடன் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, ரயில் சிறைபிடிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே ரயில் விடுவிக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து சம்புரான் சிங் அந்த ரயிலின் உரிமையாளராக மாறினார். இப்படித்தான் சம்புரான் சிங் நாட்டிலேயே முதல் முறையாக ஒரு ரயிலின் உரிமையாளர் ஆனார்.

Kokila

Next Post

மக்களே எச்சரிக்கை!… தும்மல் வந்தால் அடக்காதீர்கள்!… இங்கிலாந்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Wed Aug 16 , 2023
இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் தும்மலை அடக்க முயன்றதால், அவரின் தொண்டையில் துளை ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த 34 வயதான நபர், வாயை மூடிக்கொண்டு நாசியைத் தடுப்பதன் மூலம் தும்மலை அடக்க முயன்றுள்ளார். இதன் விளைவாக தொண்டையில் அழற்சி ஏற்பட்டுள்ளது. இதனை பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் துளை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குரல்வளை, அல்லது தொண்டை என்பது சுவாச மற்றும் செரிமான அமைப்பின் ஒரு பகுதியாகும், இது […]

You May Like