இந்திய-வங்கதேச எல்லையில் மிகப்பெரிய தங்கம் கடத்தல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் தடுத்ததுடன், ரூ.14 கோடி மதிப்பிலான 23 கிலோ தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
ஒரு பெரிய அளவிலான தங்கம் கடத்தல் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, இந்திய-வங்கதேச எல்லையில் சோதனையில் ஈடுபட்டபோது, பைக் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை சந்தேகித்த பாதுகாப்புப்படையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில், பைக்கை அங்கேயே விட்டுவிட்டு அவர் தப்பி செல்ல முயன்றுள்ளார். எனினும், உஷாரான பாதுகாப்புப் படையினர் அவரை அந்த இடத்திலேயே கைது செய்தனர்.
இதனை அடுத்து அவர் வந்த பைக்கை சோதனை செய்தபோது, ஏர் ஃபில்டரில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் இருப்பது தெரியவந்தது.
பிடிபட்டவர் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான இந்திரஜித் பத்ரா என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 50 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 16 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பி-இடைப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.14 கோடி மதிப்பிலானாவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், பிடிபட்ட இந்திரஜித்தும் அவரது சகோதரனும் நகைக் கடை நடத்தி வருவதாகவும், இவர்களை சில தினங்களுக்கு முன் சமீர் என்ற நபர் அணுகி ரங்காட்டில் இருந்து பங்கானுக்கு தங்கம் கொண்டு செல்ல மாதம் ரூ.15,000 தருவதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து சமீர் கொடுத்த தங்கத்தை தனது பைக்கின் ஏர் ஃபில்டரில் மறைத்து வைத்து சென்றதாக கூறியுள்ளார்.
இதனைதொடர்=ந்து கைது செய்யப்பட்ட இந்திரஜித்தும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாக்தாவில் உள்ள சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.