fbpx

இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய கட்டணம் அதிகமாமே..!! எவ்வளவு தெரியுமா..? தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, காப்பீடு தொகை வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்கள், விபத்து தொடர்பான ஆவணங்களை காவல்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை, உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு ஆவணத்துக்கான பதிவிறக்க கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா வெளியிட்ட உத்தரவில், ”சாலை விபத்து தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து காப்பீட்டுக்கான பயன்கள் கிடைக்க தமிழ்நாடு அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, விபத்து வழக்கு குறித்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சாலை விபத்து தொடர்பான ஒரு ஆவணத்துக்கு ரூ.100 கட்டணத்தை அரசுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

இந்த தொகையில் குறிப்பிட்ட பங்கு, குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு வலையமைப்பு சேவை நிதியத்தில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துக்கள் குறித்த முதல் தகவல் அறிக்கை வாகன பதிவு விவரங்கள் போன்றவை காப்பீடு நிறுவனங்களுக்கு தேவையானதாக உள்ளன. இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபியின் கோரிக்கையை ஏற்று ஒரு ஆவணத்தை பதிவிறக்கம் செய்வதற்கான கட்டணத்தை ரூ.125 ஆக உயர்த்த அரசுக்கு தமிழக காவல்துறை டிஜிபி பரிந்துரை செய்திருந்தார்.

டிஜிபியின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, சாலை விபத்து தொடர்பான அரசு ஆவணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கட்டணத்தை ரூ.125 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு கணக்கில் ரூ.12.50ம், குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு வலையமைப்பு சேவைகள் நிதியத்துக்கு ரூ.112-ம் வரவு வைக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஏய் எப்புட்றா .! 2024 தேர்தல் குழுவில் "கார்த்தி சிதம்பரம்" காங்கிரஸ் கமிட்டி அதிரடி.!

Thu Jan 18 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி குறித்த அதிகாரம் பூர்வ அறிவிப்பு வருகின்ற மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் இப்போது இருந்தே தேர்தல் பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கி இருக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைநகர் டெல்லியில் சுவர் விளம்பரங்களின் […]

You May Like