மலையாள பெண் இயக்குநர் லட்சுமி தீப்தா. இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெங்கானூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார். அவருடம் சினிமாவில் நடிக்க போகும் ஆசையில் லட்சுமி சொன்னபடி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார். அதன் பின்னர் படப்பிடிப்பு என்று அந்த இளைஞரை அருவிகரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு லட்சுமி தீப்தாவுடன் படக்குழுவினர் இருந்துள்ளனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. முதலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அப்போது அந்த இளைஞரிடம் நிர்வாணமாக நடிக்க சொன்ன போது அவர் மறுத்திருக்கிறார். அப்போதுதான் அந்த இளைஞருக்கு இது ஆபாசப் படம் என்பது தெரியவந்திருக்கிறது.

இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும், அந்த பெண் இயக்குனர் ஒப்பந்தத்தை காட்டி இருக்கிறார்கள். அதில், ஆபாச படத்தில் நடிப்பதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், அப்போதும் நடிக்க முடியாது என்று மறுத்த போது அப்படி என்றால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும். நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியது வரும் என்று லட்சுமி தீப்தா மிரட்டியிருக்கிறார். இதனால் வேறு வழி இன்றி அந்த இளைஞர் அப்போது நடித்து கொடுத்திருக்கிறார். பின்னர், அங்கிருந்து வந்ததும் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் போலீசில் சென்று நடந்தவற்றை சொல்லி தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் மிரட்டினார் என்று இயக்குனர் லட்சுமி தீப்தா மீது அந்த இளைஞர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இயக்குனர் லட்சுமி தீப்தாவை கைது செய்துள்ளனர். ஆபாச பட விவகாரத்தில் இயக்குனர் லட்சுமி தீப்தா கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.