fbpx

Kalki 2898 AD Day 6 | பட்டையை கிளப்பும் கல்கி 2898 AD!! 6 வது நாளும் கோடிகளை கொட்டும் வசூல்!! எவ்வளவு தெரியுமா?

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.571 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படமான ‘கல்கி 2898 ஏடி’ ஜூன் 27 அன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.

‘கல்கி 2898 ஏடி’ படத்தைப் பொறுத்தவரையில் இந்தியத் திரையுலகத்தின் பெரும் நட்சத்திரங்களான அமிதாப், கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் பலமாக உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே முதல் முறையாக நடிக்கும் தெலுங்குப் படம். இப்படி பல விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன. சுமார் 600 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி உள்ளது என சொல்லப்படுகிறது.  உலக அளவில் சுமார் 750 கோடி வசூலித்தால் மட்டுமே இந்தப் படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.

இந்த நிலையில், கல்கி 2898 AD திரைப்படம் வெளிவந்து 6 நாட்களை கடந்துள்ள நிலையில் அதற்கான வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் 6 வது நாள் இந்தியா முழுவதும் படம் கிட்டத்தட்ட ரூபாய் 28 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதில் அதிகமாக ஹிந்தியில் ரூபாய் 14 கோடிகளும், தெலுங்கில் ரூபாய் 12 கோடிகளும் வசூல் செய்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரூபாய் 1.2 கோடிகள் வசூல் செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் மொத்த வசூல் 371 கோடியை எட்டியது. இதன் மூலம் 6 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 571 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 

Read more | Post Office Savings Schemes | அஞ்சலகத்தில் இப்படி கூட திட்டங்கள் இருக்கிறதா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

English Summary

The film team announced that Prabhas starrer ‘Kalki 2898 AD’ has collected Rs.571 crores worldwide in 6 days of its release.

Next Post

உத்தரப்பிரதேச ஆன்மிக நிகழ்வு..!! பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு..!!

Wed Jul 3 , 2024
121 people have died in the stampede of the Uttar Pradesh spiritual event so far.

You May Like