fbpx

ஜன.,9ல் ரிலீசாகிறது ஜனநாயகன்.. தரமான சம்பவம் வெயிட்டிங்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

தவெக தலைவர் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம் ஜன.,9ல் ரிலீசாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ஜன நாயகன். இந்த படத்துடன் விஜய் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். அதனால் ‘தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரும் அளவில் இருக்கும் நிலையில் படத்தின் படபடிப்பு வேகமாக நடந்து வருகிறது. முன்னதாக “நான் ஆணையிட்டால்..” என்ற தலைப்புடன் விஜய் சாட்டையை சுழற்றுவது போல் போஸ்டரை வெளியிட்டது படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை குறிக்கும் விதமாகவும் இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்டர் விஜய் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ஜன நாயகன் படப்பிடிப்பை முடித்த கையோடு தீவிர அரசியலில் களம் இறங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் விஜய்யின் 69வது மற்றும் கடைசி படமான ஜனநாயகன், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி போடப்பட்டிருப்பதை நினைத்து விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Read more: உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர்.. பதவியில் தொடர என்ன உரிமை இருக்கிறது..? – அண்ணாமலை காட்டம்

English Summary

The film team has officially announced that Vijay’s film Jananayagan will release on January 9th.

Next Post

Oil Pulling | ’காலையில் எழுந்ததும் ஆயில் புல்லிங் பண்ணுங்க’..!! கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!! உடனடி தீர்வு கிடைக்கும்..!!

Tue Mar 25 , 2025
Oil pulling improves oral health and keeps your mouth clean.

You May Like