fbpx

திரையுலகமே சோகம்..!! ’லொள்ளு சபா’ நடிகர் சேஷூ காலமானார்..!! திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..!!

’லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார்.

லொள்ளு சபா நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்றி நடித்து வந்த சேஷூ இன்று காலமானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது அவருடைய இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சற்று முன் சேஷூ காலமானார். சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருந்தார். இவரின் காட்சிகளுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை..!! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அதிரடி..!!

Chella

Next Post

திமுகவின் வாக்கு வங்கியை உடைக்க பாஜக வியூகம்... கட்டம் கட்டப்பட்ட 8 திமுக தலைகள் யார்?

Tue Mar 26 , 2024
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதைவிட அதிகமாக, பாஜகவின் வியூகங்கள் அனலை கிளப்பிவிட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவுக்கு எல்லா வகைகளிலும் செக் வைப்பதற்கான முயற்சியையும் பாஜக மேற்கொள்ளப்போவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, திமுக மற்றும் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களில் சிலரின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்றே நினைக்கிறதாம் பாஜக. குறிப்பாக, கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆ.ராசா, […]

You May Like