கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் திருவட்டாரில் உள்ள மடத்துவிளை கிராமத்தில் பந்தல் கட்டும் தொழிலாளி தங்கமணி மற்றும் மனைவி புஷ்பபாய்(60) வசித்து வந்துள்ளனர். மனைவி அருகில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ள, போது திடீரென்று ஆற்றில் மூழ்கி மாயமாகி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் தீயணைப்பு, மீட்பு படையினர் ஆற்றில் குளிக்க சென்ற மூதாட்டியை தேடி வந்துள்ளனர். தொடர்ந்து தேடியதில் நேற்று காலை 30 பேர் கொண்ட 3 குழுக்களாக பிரிந்து தேடிவந்துள்ளனர்.
சில மணி தேடலின் பின்பு அவர் விழுந்த இடத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் மூங்கில் கூட்டத்தினுடைய பகுதியில், ஆற்றில் ஏதோ உடல் ஒன்று மிதப்பது போல் தெரிந்துள்ளது. அதனை தொடர்ந்து அருகில் சென்று பார்த்தபோது மாயமான புஷ்பபாய் என்பது தெரிய வந்ததுள்ளது.
அத்துடன் அவர் உயிருடன் இருப்பதை தெரிந்து கொண்டு தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துணையினருக்கு புஷ்பபாயின் மகன் ரமேஷ் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.