fbpx

இந்தியா கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல்..! 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடக்கம்…

கேரளா, திரிபுராவில், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

இந்தியா கூட்டணி இன்று நடைபெறவுள்ள 7 தொகுதிகளில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி தொகுதி, ஜார்கண்டின் டும்ரி மற்றும் தன்பூர் தொகுதிகள், திரிபுராவில் உள்ள போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர்தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரி தொகுதி மற்றும் கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் இந்தியா கூட்டணி தனித்து போட்டியிடுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் வெற்றிடமானது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெறுகிறது.

Kathir

Next Post

உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு தான்...! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு...!

Tue Sep 5 , 2023
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு , கொரோனா போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அவரது கருத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா; உதயநிதி ஸ்டாலின் எதன் […]

You May Like