fbpx

இந்தியாவில் BMW நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் எலெக்ட்ரிக் கார்..!! 560 கிமீ பயணிக்கலாம்..!!

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) இந்தியாவில் முதல் முறையாக தனது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஐ7 எம் 70 எக்ஸ்ரைவ் என்பது தான் அந்த மாடலின் பெயராகும். இந்தக் கார் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதால் இதன் விலை அதிகம் தான்.

அதாவது இந்த காரின் விலை இந்தியாவில் 2.5 கோடி ரூபாய். ஆனால், தொழில்நுட்ப ரீதியாதகவும், பாதுகாப்பு விசயத்திலும் அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது. சிபியூ (completely built-up) யூனிட்டாக இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரில் 660 எச்பி மற்றும் 1100 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரால் வெறும் 3.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிட முடியும்.

இதுதவிர, மிகவும் ஸ்லிம்மான மறுசுழற்சி செய்யத்தக்க ஓர் லித்தியம் அயன் பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு 560 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் வாயிலாக மிகசிறந்த டிரைவிங் அனுபவம் இந்த காரில் நிச்சயம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த காரிலும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஈகோ ப்ரோ மோட், பிரேக் எனர்ஜி ரீஜெனரேசன் மற்றும் பல அம்சங்களை இந்த காரில் காணலாம். இதை கூடுதலாக்கும் விதமாக பிஎம்டபிள்யூ ஐடிரைவ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆபரேட்டிங் சிஸ்டம் 8.5 அங்குல அளவில் இந்தக் காரில் உள்ளது.

மேலும், 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அட்டெண்டிவ்னெஸ் அசிஸ்டன்ஸ், டைனமிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், கார்னரி பிரேக் கணட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் உள்ளது. இந்த காரில் 21 இன்ஞ் ஸ்டாண்டர்டு எம் லைட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்புகள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன. பனோரமிக் கண்ணாடி ரூஃப் இந்த காரின் அழகை மேலும் அதிகரிக்க செய்கிறது. அதோடு மேற்கூரையில் இருந்து வரும் 31 இன்ஞ் டச் ஸ்கிரீன் நமக்கு காருக்குள் ஒரு தியேட்டரின் அனுபவத்தை வழங்குகிறது. இந்த கார் கண்டிப்பாக ஒரு நேர்த்தியான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Chella

Next Post

’இந்த வைரஸுக்கு அழிவே கிடையாது’..!! புதிதாக உருவெடுத்த கொரோனா..!! பீதியை உண்டாக்கும் ஆராய்ச்சி முடிவுகள்..!!

Sat Oct 28 , 2023
ஜப்பானிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா பாதிப்பின் புதிய வடிவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லான்செட் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் ‘பைரோலா’ அல்லது பிஏ.2.86 வடிவம் பற்றி முக்கியமான முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவை சேர்ந்த நபர் இந்த புதுவித கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். இந்தியா மட்டுமில்லாமல் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பரிக்கா நாடுகளிலும் இந்த புதிய […]

You May Like