இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிகாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது போட்டி ஜூலை 20 முதல் 24 வரை போர்ட் ஆஃப் ஸ்பெயினில் (டிரினிடாட்) பார்க் ஓவலில் திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளை கரீபியன் தீவுகளில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொள்கிறது, இதன் முதல் ஆட்டம் புதன்கிழமை (ஜூலை 12) முதல் ரோசோவில் (டொமினிகா) வின்ட்சர் பூங்காவில் நடைபெறுகிறது. 1வது டெஸ்ட்: ஜூலை 12-16, விண்ட்சர் பார்க், ரோசோ, டொமினிகா, 2வது டெஸ்ட்: ஜூலை 20 –24, குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்ஸ்.
ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணி தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்தில் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையின் 2023 பதிப்பிற்கும் தகுதி பெறத் தவறிவிட்டனர். இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சுழற்சியில் முதல் போட்டியாகும். இதனால் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிடி ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படும், ஆனால் இலவச கேபிள் நெட்வொர்க்குகளில் மட்டுமே ஒளிபரப்பப்படும், டிடிஎச்சில் அல்ல. ஜியோ சினிமா இணையதளம் மற்றும் ஃபேன்கோடு ஆகியவற்றில் லைவ் ஸ்ட்ரீமிங் கிடைக்கும். ஜியோ சினிமா இந்தியாவில் போட்டிகளை இலவசமாக நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
இந்திய அணி: ரோஹித் ஷர்மா, அஜிங்க்யா ரஹானே , கேஎஸ் பாரத், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார், அக்சர் படேல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனட்கட். மேற்கிந்திய தீவுகள்: கிரேக் பிராத்வைட் , ஜெர்மைன் பிளாக்வுட், ஜோசுவா டா சில்வா, அலிக் அத்தனாசே, ரஹ் கார்ன்வால், ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச், டேகனரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, ஜோமெல் வாரிக்கன்.