தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். நாளை முதல் இதன் தலைவராக அமுதா பொறுப்பேற்கிறார். தென்மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு முதல் பெண் தலைவர் அமுதா என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மண்டல வானிலை ஆய்வு மையம் : இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று சென்னை வானிலை ஆய்வு மையம். இந்த மையமானது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை கவனித்துக்கொள்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் வானிலை ஆய்வு மையமானது 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமையப்பெற்றுள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த அமுதா? சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு புதிய தலைவராக அமுதா பொறுப்பேற்கிறார். இவர் 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், வடகிழக்கு பருவமழை தொடர்பான தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:கருணாநதி மகனா.. பிரபாகரன் மகனா..? நேருக்கு நேர் நில்லுங்க..!! – ஸ்டாலினுக்கு சீமான் பகிரங்க சவால்