fbpx

குழந்தையை தலைகீழாக தூக்கி சுவரில் ஓங்கி அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்..!! வலிப்பு நோயால் இறந்ததாக நாடகம்..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அமைந்தக்கரையை சேர்ந்தவர் செல்வபிரகாசம் (27). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், நாமக்கல்லை சேர்ந்த லாவண்யா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சர்வேஸ்வரன் என்ற இரண்டரை வயது மகன் இருந்தான். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

செல்வப்பிரகாசம் அமைந்தகரையிலும், லாவண்யா கெருகம்பாக்கத்திலும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் செல்வப்பிரகாசம் தனது மகனை பார்க்க கெருகம்பாக்கத்தில் உள்ள லாவண்யா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லாவண்யா வீட்டில் இல்லை. மேலும், மகன் சர்வேஸ்வரனும் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து தந்தை செல்வப்பிரகாசத்துக்கு தெரிவிக்கவில்லை. இதனால், செல்வப்பிரகாசம் அதிர்ச்சியடைந்தார். மேலும், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக மாங்காடு காவல் நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போரூர் காவல் உதவி ஆணையர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் மற்றும் மாங்காடு காவல் ஆய்வாளர் ராஜி ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், தலையில் காயம் ஏற்பட்டு சர்வேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 5ஆம் தேதி இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமறைவான லாவண்யா தனது கள்ளக்காதன் மணிகண்டன் என்பவருடன் வசித்து வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், செல்வப்பிரகாசம், தனது மனைவி லாவண்யாவுடன் கெருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது, அங்கு லாவண்யாவின் கல்லூரி நண்பர் மணிகண்டனும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அப்போது, மணிகண்டனுக்கும், லாவண்யாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதுபற்றி அறிந்த செல்வப்பிரகாசம், தனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் லாவண்யா, திருந்துவதாக இல்லை. மணிகண்டனுடன் இருந்த தொடர்பையும்விடவில்லை. இதனால், செல்வப்பிரகாசம், மனைவியை பிரிந்து அமைந்தகரையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் லாவண்யா, மணிகண்டன் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக சர்வேஸ்வரன் இருப்பதாக கருதினர். எனவே, குழந்தை சர்வேஸ்வரனை மணிகண்டன் அடிக்கடி அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் குழந்தைக்கு உடலில் தழும்புகள் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த மே 5ஆம் தேதி குழந்தை சர்வேஸ்வரன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது குறும்புத்தனமாக மணிகண்டனின் செல்போனை எடுத்து தண்ணீரில் போட்டுள்ளான். இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், லாவண்யா இருவரும் சேர்ந்து குழந்தையை சரமாரியாக அடித்துள்ளனர். குழந்தையைப் பிடித்து, தலைகீழாக தூக்கி ஓங்கி சுவரில் அடித்துள்ளனர்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த குழந்தை அங்கேயே மயங்கி விழுந்துள்ளது. பின்னர் இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், சில நாட்களில் வீடு திரும்பியுள்ளனர். பல முறை லாவண்யா- மணிகண்டன் அடித்ததன் காரணமாக சர்வேஸ்வரனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. உடனே, லாவண்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தை வலிப்பு நோயால் இறந்தாக கருதி மாங்காடு போலீசார் இந்த வழக்கை முடித்திருந்தனர். இதையடுத்து, லாவண்யா தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில், கணவன் புகாரின் பேரில் அவர்கள் குழந்தையை அடித்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்காக மாற்றி சிறுவனின் தாய் லாவண்யா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மகனை மீட்க போராடிய தந்தை

லாவண்யா-மணிகண்டன் கள்ளத்தொடர்பால் தனது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திலேயே செல்வப்பிரகாசம் இருந்துள்ளார். அதற்காக பலமுறை காவல் நிலையத்திலும் முறையிட்டுள்ளார். ஆனால், போலீசார் குழந்தை தாயுடன் இருக்க வேண்டும் என்று கருதியே செல்வப்பிரகாசிடம் குழந்தையை தர மறுத்துள்ளனர். மேலும், வழக்கு தொடர்ந்தும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை.

ஆணையர் ட்வீட்

ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அருண், தனது ட்விட்டர் பக்கத்தில், ”இரண்டரை வயது குழந்தை இறந்த விவகாரத்தில் கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரங்கள் என்றும் பொய்த்துப் போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

முடிந்தது கோடை விடுமுறை..!! தொடங்கியது மழை விடுமுறை..!! கசப்பான முடிவெடுக்கும் பள்ளிக்கல்வித்துறை..!!

Mon Jun 19 , 2023
தமிழ்நாட்டில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில், மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் […]

You May Like