fbpx

ஐப்பசி மாத பௌர்ணமி..!! திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது..? கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி பெளர்ணமி துவங்கி, நவம்பர் 16ஆம் தேதி வரை பெளர்ணமி நீடிக்கிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை’ என பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிமீ தொலைவிலான கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருவார்கள்.

இதில், கார்த்திகை தீபத்தின்போது, சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அதே போல் சித்ரா பௌர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இந்நிலையில் தான், ஐப்பசி மாதத்திற்கான பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது.

இதனால், நவம்பர் 15ஆம் தேதி இரவு பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Read More : மாத சம்பளம் ரூ.36,580..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

The temple administration has announced the best time to visit Krivalam in Thiruvannamalai in view of the full moon of the month of Aippasi.

Chella

Next Post

இஸ்ரேல்-ஹமாஸ் போர்!. பேச்சுவார்த்தை முயற்சி தற்காலிகமாக நிறுத்தம்!. கத்தார் அதிரடி!

Mon Nov 11 , 2024
Israel-Hamas War!. Temporarily suspend negotiation efforts! Qatar action!

You May Like