தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், இனி வரும் நாட்களில் நாம் அனைவரும் வெப்ப அலைக்கு ஏற்றவாறு உடலளவில் தயாராக இருக்க வேண்டும். நமது உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு அடிக்கடி பார்த்து கொள்ள வேண்டும். அதேசமயம், வெயில் கடுமையாக இருக்கும்போது, வெளியில் செல்லாமல் நிழல் அல்லது ஏசி அறைகளில் இருப்பது நல்லது. மேலும், நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். அடுத்து வரவிருக்கும் நாட்களில் கோடையின் தாக்கம் இன்னும் பல மடங்கு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம், காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் இருக்கும். மார்ச் 10, 11ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (மார்ச் 5) முதல் வரும் 9ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Read More : வாடிக்கையாளர்களே உஷார்..!! முக்கிய எச்சரிக்கையை வெளியிட்ட எஸ்.பி.ஐ..!! இதை பார்த்து ஏமாறாதீங்க..!!