fbpx

செக்ஸியாக பேசி திமுக எம்எல்ஏ-வை சிக்கலில் மாட்டிவிட்ட கும்பல்..!! வாட்ஸ் அப்பில் வந்த நிர்வாண வீடியோ..!! பரபரப்பு

தொழில்நுட்ப வளர்ச்சியை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை விட தீய செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பணம் பறிக்க திட்டம் போடும் கும்பல் சமூகவலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி பணம் கேட்டு மிரட்டி வருகிறது. அடுத்த கட்டமாக ஓடிபி கேட்டு வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடவும் செய்கிறது. இந்நிலையில், தற்போது வீடியோ கால் செய்து அந்த வீடியோவை பதிவு செய்து அருகில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சியை இணைத்து பணம் கேட்டு மிரட்ட தொடங்கியிருக்கின்றனர். இது போன்ற வில்லங்கத்தில் திமுக எம்எல்ஏ சிக்கியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார் (48). இவர், தனது குடும்பத்துடன் பாரதி நகரில் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. அதனை சரவணக்குமார் ஆன் செய்தபோது எதிர்முனையில் இருந்து யாரும் பேசவில்லை. சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் பதிவு செய்து அதனுடன் பெண் ஒருவர் செக்சியாக பேசுவது போன்ற தவறாக சித்தரித்து வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பினர்.

அதன் பிறகு பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கிக் கணக்கில் 2 முறை தலா 5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆனால், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக ராஜஸ்தானில் இருந்து எம்.எல்.ஏ சரவணக்குமாருக்கு அழைப்பு வந்துள்ளது தெரிய வந்தது. உண்மையிலேயே வீடியோ அனுப்பியது பெண்ணா அல்லது வேறு யாருமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Chella

Next Post

’தக்காளி விலை தான் இப்படினா... தங்கம் விலையுமா’..? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Thu Jul 13 , 2023
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 296 உயர்ந்து விற்பனையாகிறது. ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். கடந்த மார்ச் முதல் ஏற்றம் இறக்கத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, கடந்த […]

You May Like