இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்தது குறித்து அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 19 வயதில் தான் கர்ப்பமாக இருந்ததாகவும், விந்தணுவை உட்செலுத்த ஊசியைப் பயன்படுத்தி கர்ப்பமானதாகவும் சிறுமி கூறுகிறார். மான்செஸ்டரைச் சேர்ந்த ஷானன் நசரோவிச்-க்கு 23 வயதாகும் இவருக்கு தற்போது பெண் குழந்தை உள்ளது. இவர் “TIK TOK” செயலியில் தாயாக இருந்த அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். இந்த விஷயம் தான் தற்போது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
ஷானன் 19 வயதில் ஊசி மூலம் விந்தணுவை செலுத்தி கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்திருக்கிறர். ஷானன் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் தான் விந்தணு நன்கொடையாளரையும் ஊசியையும் பயன்படுத்தியதாக தெரிவித்து இருக்கிறார். மூன்று மாதங்களுக்குள் விந்தணு நன்கொடையாளரை கண்டுபிடித்து மருத்துவப் பதிவுகள் மூலம் ஊசியைப் பயன்படுத்தி கர்ப்பம் அடைந்ததாக தெரிவிக்கிறார்.
மேலும் இந்த முறையை அவர் ‘home insemination’ என்று அழைக்கிறார். கால்போல் ஊசி மூலம் கர்ப்பமாக ஆக முடியும் என்று மக்கள் இன்னும் நம்பவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அது வேலை செய்கிறது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது – அது எனது மகள் என ஷானன் வீடியோவில் பதிவிட்டுள்ளார். இந்த விடீயோக்களை பார்க்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.