fbpx

சிறுமியை போதையாக்கி தைல மர தோப்பில் 5 பேர் கூட்டு பலாத்காரம்..!! வீடியோ லீக்கானதால் பரபரப்பு..!!

சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, தைலமர காட்டுக்குள் 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியை, ரங்கநாதன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அங்கு சிறுமிக்கு, குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, தனது நண்பர்களான மணி மற்றும் 3 பேரை செல்போனில் தொடர்பு கொண்டு தைலமர காட்டுக்கு வரவழைத்தான். பின்னர், போதையில் இருந்து சிறுமியை ரங்கநாதன் உள்ளிட்ட 5 பேர் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர்.

சிறுமியை போதையாக்கி தைல மர தோப்பில் 5 பேர் கூட்டு பலாத்காரம்..!! வீடியோ லீக்கானதால் பரபரப்பு..!!

இதையடுத்து அந்த சிறுமியை அங்கிருந்து விடுவித்த பலாத்கார கும்பல், இதுபற்றி வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை வரவழைத்து 3 முறை பாலியல் பலாத்காரத்தில் செய்துள்ளனர். இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததை பெற்றோர் அறிந்தனர். இதையடுத்து சிறுமியை, கடந்த ஜூன் மாதம் திருச்சியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இதைதொடர்ந்து குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமி தற்போது காப்பகத்திலேயே தங்கி படித்து வருகிறார்.

சிறுமியை போதையாக்கி தைல மர தோப்பில் 5 பேர் கூட்டு பலாத்காரம்..!! வீடியோ லீக்கானதால் பரபரப்பு..!!

இந்நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்த நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 5 பேரில் ஒருவன், அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளான். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த சிறுமியின் பெற்றோர், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காப்பகத்தில் இருந்த சிறுமியை, மகளிர் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன் (21), மணி (24), தர்மன் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

Chella

Next Post

#Tax: வரும் பட்ஜெட்டில் வரியில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டம்...!

Wed Nov 16 , 2022
வரும் மத்திய பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 2023ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட 25-30% அதிகமாக இருக்கும் என்றார். அதேபோல நீண்ட கால மூலதன வரிக்கான வைத்திருக்கும் கடன் பத்திரங்களுக்கு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! சம்பள உயர்வு குறித்து வெளியான ஹேப்பி நியூஸ்..!!

You May Like