fbpx

‘சிறுமியை ஆடைகளின்றி பால்கனியில் படுக்க வைத்து’..!! தந்தை – மகன் செய்த கொடூர செயல்..!! தாய் உடந்தை..!!

டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருபவர் ரேணு குமாரி. இவரது கணவர் ஆனந்த்குமார். இவர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள இவர்களது உறவுக்காரர்களின் 7 வயது மகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். அந்த 7 வயது சிறுமி டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில், மாணவியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதை அந்த சிறுமியின் ஆசிரியை பார்த்துள்ளார். பின்னர், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிறுமியை தத்தெடுத்து வந்த நாள் முதல் ரேணு குமாரி அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இரவு நேரங்களில் கடும் குளிரில் பால்கனியில் ஆடைகளின்றி தூங்க வைத்துள்ளனர். கடந்த டிசம்பரிலும், ஜனவரியிலும் இந்த கொடுமைக்கு சிறுமியை ஆளாக்கினர். இந்த கொடூரம் மட்டுமின்றி சிறுமியை ரேணு குமாரியின் கணவர் ஆனந்த்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கடும் பனியிலும், குளிரிலும் ஆடைகளின்றி படுத்து இருந்ததால் சிறுமிக்கு இருமல், சளித் தொல்லையும் ஏற்பட்டுள்ளது. இதனால், உடல்நலக்குறைவால் இருமிய சிறுமியின் நாக்கை கத்தியால் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர்.

மேலும், ரேணுகுமாரி – ஆனந்த்குமாரின் மகனாகிய ஜானும் அந்த 7 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி தகவல் கிட்டியது. சிறுமியின் உடலில் 18 இடங்களில் காயம்பட்டதற்கான தழும்புகள் இருந்துள்ளது. இதையடுத்து, சிறுமியை சித்திரவதை செய்த ஜானை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். ரேணுகுமாரியும், அவரது கணவருமான ஆனந்த்குமார் தலைமறைவாகியுள்ளனர்.

Chella

Next Post

’ஒரு டைம் சொன்னா உனக்கு புரியாதா’..? கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! மனைவியை குத்திக்கொன்ற கணவன்..!!

Fri Feb 17 , 2023
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  சென்னை அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (34). இவர் அம்மு (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், அம்முவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாகவும் இருந்து […]

You May Like