fbpx

காதலனுடன் பேசிய பெண்!. குழந்தைகள் கண்முன்னே நேர்ந்த பயங்கரம்!. ஊர் பஞ்சாயத்தில் தண்டனை!

 Uttar Pradesh: உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பாக காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்ட பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரின் சோட்கி இப்ராஹிம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் இருந்ததாக கூறி அவரை ஊர் பஞ்சாயத்தார் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அந்த பெண்ணின் கணவர் மும்பையில் வேலை செய்துவருவதாகவும் கணவர் இல்லாத நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் அந்தப் பெண் காதலித்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, திருமணத்திற்கு புறம்பான தொடர்பால் ஏற்படும் அதன் பின்விளைவுகள் குறித்து கிராம மக்கள் எச்சரித்த பின்னரும் அந்த பெண் இளைஞருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண் தனது காதலனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஊர் மக்களிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார். இளைஞர் தப்பியோடிய நிலையில், அப்பெணை குழந்தைகள் கண்முன்னே மரத்தில் கட்டிவைத்து செருப்பு மாலை அணிவித்து முகத்தில் கருப்பு மை பூசி, தலைமுடியை வெட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த இளைஞர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை மீட்டனர். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதுகாப்பு கருதி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Readmore:கார்கில் II!. உக்ரைன் போரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி!. சதி செய்யும் அமெரிக்கா!. உளவுத்துறை வட்டாரங்கள்!

English Summary

VIDEO: Woman Tied to Tree, Beaten, Face Blackened & Garlanded With Slippers In Front Of Her Kids Over Extra-Marital Affair In UP’s Pratapgarh

Kokila

Next Post

"முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் வீடு வாங்காதீங்க..!!" - பெண் பத்திரிக்கையாளரின் பதிவால் சர்ச்சை!!

Tue Jul 30 , 2024
A Hindu woman journalist, named Amrapali Sharma, has shared several videos on social media alleging harassment and threat to her life from communal Muslims living in her neighbourhood in Malad, Maharashtra.

You May Like