ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே காஞ்சிக்கோயிலை சேர்ந்த விஸ்வநாதன் மகன் தருண்குமார்(22). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், தங்கவேல் என்பவரின் மகள் சுபஸ்ரீக்கும் (19) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்ட நிலையில், தருண்குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் சுபஸ்ரீ.
இதனால், ஆத்திரமடைந்த தருண், இருவரும் காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சுபஸ்ரீ கூறிய நிலையில், போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தருண் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், 8.2.2023 அன்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த தருண்குமார், கோபி அருகே உள்ள தனது பாட்டி காளியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் தலையில் கத்திக்குத்து காயங்களுடன் தருண்குமார் ஓடிவருவதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜாமீனில் வந்த பிறகும், தனிமையில் சுபஸ்ரீயை சந்தித்து வந்ததாகவும், சம்பவத்தன்று தருண்குமாரை தொடர்பு கொண்ட சுபஸ்ரீ, அருகிலுள்ள விவசாய காட்டிற்கு வர சொன்னதாகவும் கூறப்படுகிறது. அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென சுபஸ்ரீ கத்தியால் தன்னை குத்தியதாகவும், இதை தடுத்தபோது அங்கு மறைந்திருந்த வாலிபர் ஒருவர் தன்னை கீழே தள்ளி கழுத்தை நெரித்ததாகவும் தருண்குமார் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சுபஸ்ரீக்கும் சிவரத்தினம் என்பவருக்கும் திருமணமான நிலையில், சம்பவத்தன்று தனது உறவினரான 19 வயதான கல்லூரி மாணவனுடன் சென்று தருண்குமாரை தாக்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சுபஸ்ரீ மற்றும் கல்லூரி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : ஐபிஎல் 2025 | மீண்டும் CSK அணிக்கு திரும்பும் ’சின்ன தல’ ரெய்னா..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!