fbpx

Ration Card: தூள்…! இன்னும் 3 நாள் தான்… நேரடியாக வீட்டிற்கே வந்து புதுப்பித்திட நடவடிக்கை…! தமிழக அரசு அறிவிப்பு…!

மின்னணு குடும்ப அட்டையில் விரல் ரேகை சரிபார்ப்புப் பணி விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்த்யோதயா ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.

மொத்தமுள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும், முன்னுரிமைபெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. இந்த நிலையில் குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்கள் கைரேகையை ரேஷன் கடைகளில் பதிவு செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு நபரின் கை விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் வாயிலாக உறுதி செய்யப்படுகிறது.

கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது; குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட மாட்டாது. மின்னணு குடும்ப அட்டையில் விரல் ரேகை சரிபார்ப்புப் பணி 63% முடிந்துள்ளது. இதற்கென தனி முகாம்கள் நடத்தவும் தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 29ம் தேதிக்குள் முடிக்குமாறு ரேஷன் ஊழியர்களுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

English Summary: The Government of Tamil Nadu has ordered to speed up the verification of fingerprints on the electronic family card.

Vignesh

Next Post

School | 'இனி இந்த வயதிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்'..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

Mon Feb 26 , 2024
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இனி 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயது தளர்வு குறித்து சிறுபான்மையினர் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் […]

You May Like