fbpx

மெரினாவை பார்த்து கொந்தளித்துப் போன பசுமை தீர்ப்பாயம்..!! மக்கள் தான் முழு காரணம்..!! இனி லீவு கிடையாது..!!

காணும் பொங்கலன்று அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைப்போம் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 15ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், 16ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாள் என்பது சாதி, மத வேறுபாடுகள் கடந்து அனைவரும் கொண்டாடும் கலாச்சார விழாவாகும்.

இந்நிலையில், காணும் பொங்கலன்று பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்ததால், கடற்கரை முழுவதும் குப்பை கூளமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டு காணும் பொங்கலுக்கு பிறகும் மெரினா கடற்கரை குப்பைகள் நிறைந்து காணப்படுவதும் வழக்கமாக உள்ளது.

இதனை அப்புறப்படுத்த ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மெனக்கெடுகின்றனர். இந்தாண்டும் காணும் பொங்கலுக்கு மெரினாவில் அதிகளவு மக்கள் குவிந்தனர். இதனால், அடுத்த நாள் கடற்கரையே குப்பைக்கூளமாக காட்சியளித்தது. இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்திருப்பதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. காணும் பொங்கலன்று அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைப்போம் என்றும் காணும் பொங்கலன்று மெரினா குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள்தான் காரணம் என்றும் அதனால் அன்றைய தினம் அரசு விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம் என்றும் எச்சரித்துள்ளது.

Read More : மாணவி வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்..!! தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை..!!

English Summary

The Green Tribunal has warned that it will recommend to the Tamil Nadu government to cancel the government holiday granted on Kanum Pongal.

Chella

Next Post

13 வயது முதல் 62 பேர் பலாத்காரம்..!! கவுன்சிலிங்கில் தலித் சிறுமி சொன்ன அதிர்ச்சி தகவல்..!! 57 பேர் அதிரடி கைது..!!

Tue Jan 21 , 2025
Several people took the woman from the Pathanamthitta private bus station to various places and raped her.

You May Like