fbpx

#விழுப்புரம் : கஞ்சா பழக்கத்தினால் தலைமை ஆசிரியர் தலையை பதம்பார்த்த மாணவன்..!

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் விக்னேஷ் என்ற 11ம் வகுப்பு பயின்று மாணவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். விக்னேஷ் மற்றும் அவரின் நண்பர்களும் , தினமும் கஞ்சா புகைத்துவிட்டு பள்ளிக்கு வருவதும், பள்ளி வளாகத்திலேயே மறைவாக கஞ்சா குடிப்பதும் என வழக்கமாக இருந்து வந்துள்ளனர்.

சமீபத்தில் , அவர்கள் கச்சா போதையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி தொல்லை செய்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரகுமார், அவர்களை அழைத்து கண்டித்தும் இருக்கிறார்.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

இவ்வாறு, மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாக முழு காரணமாக அங்கு நடைபெறும் கஞ்சா விற்பனையை காவல் துறையினர் தடுக்காததே என்று உள்ளூர் மக்கள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். 

Baskar

Next Post

#அரியலூர் : தொடரும் தற்கொலைகள்.. இளம்பெண் தூக்கிட்டு பரிதாப மரணம்..!

Thu Nov 17 , 2022
அரியலூர் மாவட்ட பகுதியில்  பிலிச்சுகுழி கிராமத்தில் கண்ணன் தனது மனைவி சுகுணாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  சென்ற 20 நாட்களுக்கு முன் கண்ணன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில், கணவன் – மனைவி ஆகியோர்க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று காலை நேரத்தில் கண்ணன் […]

You May Like