fbpx

தமிழ்நாட்டில் கொளுத்தப்போகும் வெயில்..!! வெளியில் போகும்போது ஜாக்கிரதை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலையானது இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை முதல் (பிப்ரவரி 17) முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸையாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாகவும், மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

Snowstorm: அவசர நிலை பிறபிப்பு!… மைனஸ் 30 டிகிரியை கடந்த வெப்பநிலை!… உறையவைக்கும் பனிப்புயல்!

Fri Feb 16 , 2024
அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி வலுப்பெற்றதால், முக்கிய நகரங்களான நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்றவற்றில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. Snowstorm: அமெரிக்காவில் பனிப்புயலால் சில நகரங்களின் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்த நிலையில், 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது. இதனால் முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு […]

You May Like