fbpx

ஊட்டியையே உருக வைத்த வெப்பம்!… 73 ஆண்டுகளில் இதுதான் அதிகம்!… அதிர்ச்சி தகவல்!

Ooty Heat: 1951ம் ஆண்டுக்கு பின் ஊட்டியில் நேற்று மிக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதை விட அதிகமானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கு மே 1ம் தேதி வரை வெயில் குறித்து மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சமவெளி பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை வெயில் சுட்டெரிப்பது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்த கோடை வெயிலின் தாக்கம் காணப்படும். குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் வெயில் அதிகமாக காணப்படும். குறிப்பாக, கூடலூர், பந்தலூர் மற்றும் முதுமலை போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். இம்முறை கோடை மழை பெய்யாத நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இதேபோல், ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது.இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Readmore: எச்சரிக்கை.!! Vitamin D குறைபாட்டால் அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்.!! இயற்கை முறையில் தவிர்ப்பது எப்படி.?

Kokila

Next Post

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி புதிய மைல்கல்!… விமர்சிப்பவர்களை பற்றி கவலையில்லை என பேச்சு!

Mon Apr 29 , 2024
Virat kohli: 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 45வது லீக் ஆட்டம் நேற்று மாலை அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 49 […]

You May Like