fbpx

ஹிண்டன்பர்க் பிரச்சனை எல்லாம் முடிஞ்சுபோச்சா அதானி..?!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கை வாயிலாக பெரிய அளவிலான இழப்பை சந்தித்து அதில் இருந்து இன்றளவும் மீள முடியாமல் மாடிக்கொண்டு இருக்கிறது.   இந்த நிலையிலும் அதானி குழுமத்தில் புதிய கடன், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் இருந்தாலும் தொடர்ந்து அனைத்து பிரிவுகளின் வர்த்தகமும் சிறப்பாக நடந்து வருகிறது.

இதேவேளையில் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக சில முக்கிய வர்த்தகம் மற்றும் நிறுவனங்களை கைப்பற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் இருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் அதானி எண்டர்பிரைசர்ஸ் தனது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதானி குழுமத்தின் முக்கிய வர்த்தக பிரிவாக இருக்கும் அதானி எணடர்பிரைசர்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் அதானி எண்டர்பிரைசர்ஸ்-ன் கிளை நிறுவனமான அதானி டிஜிட்டல் லேப்ஸ் டிரைன் புக்கிங் சேவை தளமான Trainman-ஐ இயக்கும் Stark Enterprises நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. குர்கிராம் பகுதியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Stark Enterprises நிறுவனம் ஐஆர்சிடிசி தளத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட ஒரு ஆன்லைன் டிரைன் புக்கிக் தளமாகும். இந்த டிரைன்மேன் நிறுவனத்தை ஐஐடி ரூக்கி கல்லூரியின் முன்னாள் மாணவர்களாக வினித் சிரானியா, கரண் குமார் ஆகியோர் இணைந்து உருவாக்கியது, இந்த நிறுவனம் சமீபத்தில் 1 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் டிரைன்மேன் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றுவதன் மூலம் மீண்டும் mergers மற்றும் acquisition பிரிவில் தனது ஆட்டத்தை துவங்கியுள்ளதா என்ற கேள்வுயுடன், நிறுவன கைப்பற்றலை இதோடு நிறுத்திவிடுமா அல்லது அதிகளவில் பயன்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.  

இது ஒருபக்கம் இருக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை செபி விசாரித்து வரும் வேளையில் விரைவில் முழு ரிப்போர்ட் வெளியாக உள்ளது, சமீபத்தில் அதானி குழுமத்தில் முதலீடு செய்த மொரிஷியஸ் நாட்டின் நிறுவனங்கள் குறித்து வெளியான தகவல் அதிர்ச்சி அளித்தது. இவை அனைத்தும் செபி தனது மொத்த அறிக்கையில் முக்கியமானதாக கூறப்பட வாய்ப்புகள் உள்ளது.

Maha

Next Post

விஜய் தமிழக அரசியலில் டாப்-டூ பாட்டம் அட்டாக்.. பக்கா ஸ்கெட்ச்..!

Sat Jun 17 , 2023
தமிழக அரசியலில் வெற்றி, தோல்விகளை நிர்ணயம் செய்யக்கூடிய அனைத்து தரப்புகளையும் குறிவைத்து, விஜய் பேசியிருப்பது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.   முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு, எனது தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என எனது மனதில் நீண்டகாலமாக ஓடிக்கொண்டு இருந்தது. அதுக்கான நேரம் தான் […]

You May Like