அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலபாமா மாகாணத்தின் டாட்வில்லி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் அப்பகுதியில் உள்ள நடன அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த 28 பேர் ரஸ்ஸல் மருத்துவமனையிலும், கிழக்கு அலபாமா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் உள்ளூர் கால்பந்து வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். எனினும், தாக்குதல் நடத்தியவர் குறித்த விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.