ஜெர்மன் நாட்டில் ஹைடெல்பர்க் நகரில் 29 வயதுடைய நபர் ஒருவர் தனது வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் பழைய பொருட்களை போட்டு வைக்கும் அறைக்கு சென்றுள்ளார். அதில் அவருக்கு சில தங்க கட்டிகளும், தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன. இதை எடுத்துக் கொண்டு அவர் உடனடியாக போலீசிடம் சென்றுள்ளார். ஜெர்மனியை பொறுத்தவரை புதையல் ஏதாவது கிடைத்தால் அதனை உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். 6 மாதங்களுக்குள் அந்த புதையலின் சொந்தக்காரர் கிடைக்காவிட்டால் யார் புதையலை கண்டெடுத்தார்களோ அவர்களிடமே அது ஒப்படைக்கப்படும்.
அப்படி புதையலின் உரிமையாளர் கிடைத்து விட்டாலும் அதில் ஒரு பங்கு கண்டுபிடித்தவருக்கு கொடுக்கப்படும். அதன்படி, அந்த நபருக்கு கிடைத்துள்ள புதையலின் மதிப்பு 118,633 பவுண்டுகள் ஆகும். புதையலின் உரிமையாளர் கிடைத்தால் புதையலை கண்டெடுத்தவருக்கு 3518 பவுண்டுகள் கிடைக்கும். இல்லையென்றால் மொத்த புதையலும் அவருக்கே கொடுக்கப்படும். இதனால் புதையலின் சொந்தக்காரரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.