fbpx

16 வயது பெண்ணை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களின்… வீட்டை புல்டோசர் வைத்து இடித்து நடவடிக்கை..!

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இருக்கும் நைகாரி என்ற பகுதியில் வசித்து வரும் 16 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை மாலை அவருடைய ஆண் நண்பருடன் அருகே இருந்த கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு அருகே இருந்த இடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் அங்கு வந்துள்ளனர். இளம் பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி விட்டு அந்த ஆறு பேரும், ஆண் நண்பரின் கண்முன்னே அந்த பெண்ணை கடத்தி சென்று அருகில் இருந்த காட்டுப் பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அத்துடன் அந்த பெண்ணை தாக்கி அவரது நகை மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மோசமான உடல்நிலையுடன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்த நிலையில், அப்பகுதியின் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அணில் சோன்கர் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் கைதான மூன்று பேரின் வீடுகளை மற்றும் சொந்தமான இடங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் புல்டோசர் வைத்து இடித்துள்ளனர். மீதியுள்ள மூன்று பேரை கைது செய்தவுடன் அவர்கள் உடமைகள் மீதும் புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாலியல் குற்றங்கள் செய்பவர்கள் உடமைகள் மீது இது போன்ற புல்டோசர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவனம் பெற்ற நிலையில், இதே தண்டனை தற்போது மத்தியப் பிரதேச அரசும் செயல் படுத்தி வருகிறது.

Rupa

Next Post

போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்திய மருத்துவ மாணவர்கள் ஏன் உக்ரைனுக்கு திரும்புகின்றனர்..?

Mon Sep 19 , 2022
ரஷ்யா உடனான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பல இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனுக்குத் திரும்பி, தங்கள் படிப்பைத் தொடர முடிவு செய்துள்ளனர்.. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் அதன் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக உக்ரைனில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் தங்களின் சொந்த நாடுகளுக்கு […]
செப்டம்பர் முதல் நேரடி வகுப்புகள்..! நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு உக்ரைன் அழைப்பு..!

You May Like