திருப்பதி திருமலையில் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற தோள்மேல் சுமந்து கொண்டே படிக்கட்டுகளை ஏறிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடியப்புலங்காவை சேர்ந்த லாரி உரிமையாளர் வரத வீர வெங்கட சத்யநாராயணா . அவருடைய மனைவி லாவண்யா . இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தங்களுக்கு மகன் பிறந்தநாள் மலை ஏறி வருவதாக திருப்பதி ஏழு மலையானிடம் வேண்டிக்கொண்டனர். இதனால் மகன் பிறந்தை அடுத்து நேர்த்திக் கடன் செலுத்த தம்பதியினர் திருப்பதிக்கு வந்தனர்.

அப்போது கணவன் வேகமாக படிக்கட்டுகளை ஏறிச் சென்றார். இதைப் பார்த்த லாவண்யா என்னை தோள் மேல் தூக்கிச் செல்ல முடியுமா எனக்கேட்டார். அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவரை தோள் மேல் சுமந்து கொண்டு படி ஏறத் தொடங்கினார்.
கடகட என படிக்கட்டுக்களை ஏறிய கணவன் 70 படிக்கட்டுக்களை லாவண்யாவை தோளில் சுமந்து கொண்டே ஏறிவிட்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சியைக் கண்ட மற்ற பக்தகர்கள் இவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். கணவருக்கு அதிகம் சிரமம் தரக் கூடாது என எண்ணிய லாவண்யா போது என கூறி இறங்கிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.