fbpx

டார்ச்லைட்டை மனைவியின் பிறப்புறுப்பில் வைத்து அழுத்திய கணவன்..!! குடிபோதையில் பகீர் சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அத்திகோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வனம் என்கிற வனராஜ் (50). இவர் ஏசுராணி (எ) உமாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். ஏசுராணிக்கும் வனராஜ் 2வது கணவர் ஆவார். இவர்கள் இருவரும் முதல் திருமணத்தின்போது பிறந்த 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே, வனராஜ் சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து காவல் வேலை செய்து வந்துள்ளார். இரவு மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரது மனைவியும் இருவரும் தங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடல் முழுவதும் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து பதறிப்போன வனராஜ் கூமாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

டார்ச்லைட்டை மனைவியின் பிறப்புறுப்பில் வைத்து அழுத்திய கணவன்..!! குடிபோதையில் பகீர் சம்பவம்..!!

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த உமாவின் கணவர் வனராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில், “இரவு தங்கியிருந்த இடத்தில் நானும் எனது மனைவியும் மது அருந்தி விட்டு உறவு கொண்டோம். அப்போது, என்னால் உறவு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எனது கையில் இருந்த டார்ச் லைட்டை வைத்து எனது மனைவியின் பிறப்புறுப்பில் அழுத்தினேன். இதனால் ரத்தம் வெளியேறி எனது மனைவி இறந்து விட்டார்” என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன போலீஸ், இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து வனராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

காலை உணவைத் தவிர்ப்பவரா நீங்கள்?... அப்போது இந்த உடல்நலப் பிரச்சினைகள் காத்திருக்கின்றன...!

Mon Jan 16 , 2023
உடலில் உள்ள கலோரிகளை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் காலை உணவை தவிர்க்கின்றனர். இருப்பினும், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஒரு நாளைத் தொடங்கும் போது உடலை அடையும் முதல் உணவு காலை உணவு. எனவே, காலை உணவைத் தவறாமல் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். பலர் இதை புறக்கணிக்கிறார்கள். காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினை உடனடியாக உணரப்படாது. இருப்பினும், காலப்போக்கில் இது ஆரோக்கியத்தை […]

You May Like