மனைவியிடம் மாத சம்பளம் எவ்வளவு என கணவன் தெரிவிக்காததால் சட்டத்தை நாடி தெரிந்துகொண்டுள்ளார்.
சில கணவன்மார்கள் தனது சம்பளம் குறித்த தகவலை மனைவியிடம் பகிர்ந்து கொள்வதில்லை. ஒருவேளை திருமண உறவு முறியும் தருவாயில் வழக்கறிஞர் மூலம் கேட்டுப் பெறலாம். ஆனால் கணவனுடன் வாழும் நிலையில் அவரது ஊதியம் குறித்த தகவலை கணவன் தெரிவிக்கவில்லை என்றால் அதற்கும் வழி உள்ளது. அது தான் ஆர்.டி.ஐ. சட்டம் . சஞ்சு குப்தா என்பவர் தனது கணவரின் வருமானத்தை அறிந்து கொள்ள நினைத்துள்ளார். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை. எனவே மத்திய பொது தகவல் தரும் அதிகாரி (வருமான வரித்துறை ) கணவன் சம்மதிக்காததால் முதலில் விவரங்களை வழங்கவில்லை.
முதலில் மேல் முறையீட்டு ஆணையம் என்ற எஃப். ஏ.ஏ. விடம் சஞ்சு குப்தா உதவி கேட்டார். இதையடுத்து மத்திய பொது தகவல் தரும் ஆணையத்தை அணுகினார். அதில் சில தீர்ப்புகளை ஆராய்ந்து தகவல் தருமாறு உத்தரவிட்டது. 15 நாட்களுக்குள் பொது அதிகாரத்தில்இருக்கும் கணவர் நிகர வரிக்குள்பட்ட வருமானம் அல்லது மொத்த வருமான குறித்த விவரங்களை வழங்குமாறு மத்திய பொதுத் தகவல் அதிகாரிக்கு ஆணையம் உத்தரவிட்டது.